திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக சி. என். அண்ணாதுரை அவர்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியம் பகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு தமிழக சட்டப்பேரவை துணை தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு. பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று மக்களை சந்தித்து
நன்றி தெரிவித்தனர்.
உடன் மாவட்ட அவைத்தலைவர் கோ. கண்ணன், ஒன்றிய கழக செயலாளளர் சி. மாரிமுத்து உள்ளிட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் , பெரும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.