திருவண்ணாமலை நகர திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழா அண்ணா சிலை அருகே நேற்று நடந்தது. நகர செயலாளர் கார்த்திக்வேல்முருகன் தலைமை தாங்கினார். மேயர் நிர்மலாதேவி, துணை மேயர் ராஜாங்கம், நகர நிர்வாகிகள் சி. சண்முகம், குட்டி க. புகழேந்தி, இல. குணசேகரன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் சீனிவாசன் வரவேற்றார்.
விழாவில், மக்கள் முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி பெரிதும் துணைநிற்பது மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மகளிரின் மனமகிழ்ச்சிக்காக என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் கல்பாக்கம் ரேவதி தலைமையில் நடந்தது. பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து, சட்டப்பேரவைத் துணைச் சபாநாயகர் கு. பிச்சாண்டி, மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் ஆகியோர் பேசினர்.