வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி செய்கின்றனர் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மேலும், "கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 2,149 பணியாளர்கள், மின்வாரியம் சார்பாக 5,000க்கும் மேற்பட்ட மின்களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது" என தெரிவித்துள்ளது.