திருவண்ணாமலை மாவட்டம்,
போளூர் நகரில் அமைந்துள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு
வருகின்ற 10. 08. 2024 அன்று திறந்து வைக்க வருகை தரவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மற்றும் கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர் எ. வ. வே. கம்பன் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
உடன் முன்னாள் சட்டமன்ற, உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள்,
மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.