வெக்காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

72பார்த்தது
வெக்காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்குகிறது. இந்த கோயிலில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அன்று தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டான நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி