விஜயகாந்தை 'தமிழகத்தின் சிங்கம்' என்று பிரதமர் மோடி அன்பாக அழைப்பார், அவர்களுடைய நட்பு மிகவும் அரிதான ஒன்று என பிரேமலதா கூறியிருந்தார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில், "எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்! நானும், அவரும் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்" என்றார். இதன்மூலம் NDA கூட்டணியில் தேமுதிக இணைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.