ஆத்துரை காளியம்மன் கோயில் 8ம் ஆண்டு தேரோட்டம் திருவிழா.

77பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 5 நாட்கள் ஆடித்திருவிழா நடப்பது வழக்கம். இந்த வகையில் இந்த வருடம் 8ம் ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி தொடங்கியது. காலை 108 பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் ஊர் பொதுமக்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காளியம்மனை மரத்தேரில் அமர்த்தி, தேர் சக்கரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்ட திருவிழா தொடங்கியது. இதில் ஆத்துரை பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை ஆத்துரை கிராம பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள், இளைஞர்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி