சென்னையில் ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பெண்ணொருவர் தவறுதலாக குப்பையில் வீசிய நிலையில் தூய்மை பணியாளர் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கும் போது பூக்களுடன் இருந்த செயினை பார்த்த பாலு என்ற தூய்மை பணியாளர் நேர்மை தவறாமல் நடந்துக் கொண்டது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. செயினுக்கு உரிமையாளரும் பாலுவுக்கு நன்றி தெரிவித்தார்.