திருவண்ணாமலை: மகளிர் சுய உதவிக்குழு அரங்கம்; துணை முதல்வர் ஆய்வு

52பார்த்தது
திருவண்ணாமலை: மகளிர் சுய உதவிக்குழு அரங்கம்; துணை முதல்வர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதற்கு முன்பாக, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சகோதரிகள் உற்பத்தி செய்த பொருட்கள் அடங்கிய அரங்கிற்கு சென்று அவற்றின் பயன்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

உடன் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி