திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பஜார் வீதியில் இன்று அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு போளூர் சட்டமன்றத் உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சிறப்புரை நிகழ்த்தினார். உடன் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.