வானிலை மாற்றங்களின் போது உடலை நீரேற்றமாக இருக்க தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். தர்பூசணி, வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். சர்க்கரை, காஃபின் பானங்களை தவிர்க்கவும். லேசான நீரிழப்பு கூட கடுமையான சோர்வை ஏற்படுத்தும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுவதோடு, நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. வானிலை மாறும்போது, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விழிப்புடன் இருக்க வேண்டும்.