கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த போது அங்கிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ரவீந்திரநாத் கார் தாக்கப்பட்டது. தேர்தல் வழக்கு தொடர்பாக ஓபி.ரவீந்திரநாத் நேரில் ஆஜர் ஆகி கோட்டில் சாட்சியம் அளித்துள்ளார்.