திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று இந்திய திருநாட்டில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜ், துணை மேயர் ராஜாங்கம், திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்