திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலூர் சாலை சாரோன் பகுதியில் புதிய நியாய விலை கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பொதுப் பணிகள், கட்டிடங்கள், நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், திமுக மாநிலம் மருத்துவர் அணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.