36 கிலோ தேயிலை பாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார்

74பார்த்தது
36 கிலோ தேயிலை பாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார்
செய்யாற்றில் உள்ள மளிகைக் கடைகளில் பிரபல நிறுவனத்தின் தேயிலை என்ற பெயரில், போலியான தேயிலை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அந்நிறுவனத்தின் முதன்மை மேலாளா் மணிமாறன் சனிக்கிழமை செய்யாறு பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதில், இரண்டு மளிகைக் கடைகளில் முன்னணி நிறுவனம் பெயரில் போலியாக தேயிலை விற்பனைக்கு வைத்து இருந்ததைக் கண்டுபிடித்தாா்.

உடனே இரு கடைகளில் இருந்தும் விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 36 கிலோ தேயிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினா்.

இதுகுறித்து அந்த மளிகை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதன்மை மேலாளா் மணிமாறன் செய்யாறு போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி