ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத் திறப்பு விழா

83பார்த்தது
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத் திறப்பு விழா
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூபாய் 3. 435 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி அலுவலக பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி