வளர்ச்சி திட்ட பணிகள், எம்எல்ஏ துவக்கி வைப்பு

58பார்த்தது
வளர்ச்சி திட்ட பணிகள், எம்எல்ஏ துவக்கி வைப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி அனக்காவூா் ஒன்றியம், நல்லாலம் கிராமத்தில் குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 20 லட்சத்தில் புதிதாக இரண்டு குடிநீா்க் குழாய் இணைப்பு மற்றும் சேமிப்பு தொட்டியும், வாழ்குடை அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 5 லட்சத்தில் புதிதாக கலையரங்கமும், அனைத்து கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் கோட்டக்கரம் கிராமத்தில் ரூ. 7. 49 லட்சத்தில் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடமும் என கட்டப்பட்டிருந்தன. இவைகளின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட துணைச் செயலா் க. லோகநாதன் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராமம்) வெங்கடேசன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக தொகுதி எம். எல். ஏ. ஒ. ஜோதி பங்கேற்று மேற்கண்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கிவைத்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, கொருக்கை, வாழ்குடை, செங்காடு, கோவிலூா், அனக்காவூா், புரிசை ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்களை 398 மாணவ, மாணவிகளுக்கு எம். எல். ஏ. வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி