பங்குச்சந்தை நிஃப்டி 23,000 என்ற சப்போர்ட் புள்ளிகளை உடைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இதுவே முதல் முறையாகும். இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் 23,000 புள்ளிகளுக்கு கீழ் சென்ற நிஃப்டி, 22:918 புள்ளிகள் வரை இறங்கியது. இந்த சப்போர்ட் லெவல் உடைந்துள்ளதால், சந்தை மேலும் கீழே இறங்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் நிஃப்டி 23,000 புள்ளிகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.