போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ரூ. 206 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க போக்குவரத்துத்துறை நிதி கோரியிருந்தது. ரூ. 206 கோடியை வட்டியில்லா குறுகிய கால கடனாக போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உரியவர்களுக்கு தொகையை வழங்க மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.