சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த 29 வயது பெண் நேற்று முன்தினம் (ஜன. 25) வீட்டிற்கு வெளியே உள்ள பாத்ரூமில் குளித்து முடித்து விட்டு, உடை மாற்றிய போது யாரோ மொபைல் போனில் வீடியோ எடுப்பது போல் உணர்ந்தார். வெளியே வந்து பார்த்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன்குமார் (27) தன்னை வீடியோ எடுத்ததை கண்டுபிடித்து போலீஸ் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.