மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மஞ்சள் கலந்த பால் கீழ்வாதத்தை குணமாக்குவதோடு முடக்கு வாதத்தின் காரணமாக உண்டாகும், வீக்கத்தையும் குறைக்கும். இதை தினமும் குடித்து வந்தால், சருமம் பளபளப்பாகும். `உலகப் பேரழகி கிளியோபாட்ரா மஞ்சள் கலந்த பாலில் குளித்ததால்தான் பளபளப்பாக இருந்தார்’ என கூறப்படுவதுண்டு.