சேலம் எஸ்சிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி குரூப் டி போட்டியில் தமிழ்நாடு, சண்டிகர் அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 301 ரன்களும், சண்டிகர் அணி 204 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் தமிழக அணி 305 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 403 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சண்டிகர் அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.