திருவண்ணாமலை: ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

75பார்த்தது
திருவண்ணாமலை: ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. 

இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்-சிறுமிகள்) எட்டாம் வகுப்பு சேருவதற்கான தேர்வு நாடு முழுவதும் சில மையங்களில் 2025 ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு எழுத விரும்புவோர் உரிய விண்ணப்பப் படிவத்தை இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். 

இதுதவிர, கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட்-248003 என்ற முகவரிக்கு வரைவோலை அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தமிழ்நாடு அரசு தேர்வாணைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு இணையதள முகவரியை பார்வையிடலாம் என்று மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி