திருவண்ணாமலை கிராமப் பகுதிகளில் தற்போது நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களில், மாற்றுத்திறனாளிகள் முகாமையும் ஒருங்கிணைத்து நடத்த திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, செங்கம் சே. நாச்சிப்பட்டு கிராமத்தில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, வரும் 30ம் தேதி தண்டராம்பட்டு ஒன்றியம் சே. கூடலூர், 31ம் தேதி ஜமுனாமரத்தூர் ஒன்றியம் புலியூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.
மேலும், வரும் 1ம் தேதி வழக்கம் போல திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடைபெறும். பின்னர், வரும் 2ம் தேதி எறையூர், 6ம் தேதி காமக்கூர், 7ம் தேதி சந்தவாசல், 9ம் தேதி கிழக்குமேடு செவரப்பூண்டி, 13ம் தேதி கொழப்பலூர், 20ம் தேதி முள்ளண்டிபுரம், 21ம் தேதி மாங்கால் கூட்ரோடு, 23ம் தேதி கொருக்கை, 30ம் தேதி மேல்பாதி, செப்டம்பர் 3ம் தேதி குத்தனூர், 9ம் தேதி ஓசூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.