மர்ம காய்ச்சல், பீதியடையும் பொதுமக்கள்

82பார்த்தது
மர்ம காய்ச்சல், பீதியடையும் பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், தானிப்பாடி அருகே உள்ள வேப்பூர் செக்கடி ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் திடீரென மர்ம காய்ச்சல் பரவியதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டனர் இது குறித்து செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தொலைபேசிக்கு வேப்பூர் செக்கடி ஊராட்சி மன்ற தலைவர் அம்மா கண்ணு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மருத்துவ முகாம் அமைக்க ஏற்பாடு செய்தார்.
இதனையடுத்து ஒரு மணி நேரத்தில் வேப்பூர் செக்கடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டிகள் நீர்நிலைகள் க்ளோரினேசன் செய்யப்பட்டன. தொடர்ந்து டாக்டர்கள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்த கிரி எம் எல் ஏ அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி