கால்நடை ஊர்திகள் துவக்க விழாவில் அமைச்சர் பங்கேற்பு

50பார்த்தது
கால்நடை ஊர்திகள் துவக்க விழாவில் அமைச்சர் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செங்கம் சட்டமன்ற தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சியில் கால்நடை ஊர்திகள் துவக்க விழாவில், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்துக்கொண்டு துவக்கி வைத்தார்.

உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி