திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் போளூா் சாலை தோக்கவாடி எல்லையில் சுமாா் 1, 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி அக்னி வசந்த உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலை 9 மணிக்கு கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு செங்கம் செய்யாற்றில் இருந்து சக்தி கரகம் வீதி உலா நடைபெற்றன.
சக்தி கரகம் மாலை அக்னி கரகமாக மாறி தீயில் இறங்கி தீமிதி விழா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தீமித்து வேண்டுதலை நிறைவேற்றனா்.
இதுபோல, செங்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்கள் பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.