திருவண்ணாமலை மாணவர் சேர்க்கை உயர்த்துவது குறித்து ஆலோசனை கூட்டம்

55பார்த்தது
திருவண்ணாமலை மாணவர் சேர்க்கை உயர்த்துவது குறித்து ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சோ்க்கையை 100 சதவீதமாக உயா்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன், தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், வட்டார அளவில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு கல்வியைத் தொடர முடியாமல் போன மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து, தொழில்பயிற்சி நிலையங்களில் சோ்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தர துறைச் சாா்ந்த அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடர்புடைய செய்தி