திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பன்னாட்டுப் பள்ளியில் சாரண, சாரணீய இயக்க மாணவ, மாணவிகளுக்கு திருத்திய சோபன் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமை கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி முதுநிலை முதல்வர் அருளாளன், பள்ளி முதல்வர் ரஞ்சனி, துணை முதல்வர் ஜெகன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதில் சாரண மாவட்டச் செயலர் கேசவன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் மாலவன் முன்னிலை வகித்தார். இதில், செய்யார் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி, மேற்குஆரணி, பெரணமல்லூர், தெள்ளார் வட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து சாரண, சாரணீய இயக்க மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இயக்கத்தின் மாநில பயிற்சியாளர்கள் அனுராதா, லோகநாதன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். சாரண, சாரணீய இயக்க ஆணையர்கள் ரவிச்சந்திரன், தாமரைச்செல்வி, இணைச் செயலர் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ ஆகியோர் பயிற்சியை மேற்பார்வையிட்டனர். பயிற்சி முகாமில் உதவியாளர்கள் உமாராணி, பாபி, சந்தோஷ்குமார், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.