திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில், மாலை திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 10 நிமிஷங்கள் மட்டுமே நீடித்தது. சிறிது இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
இதேபோல, இரவு முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தபடியே இருந்தது. மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து, குளிா் காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.