திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் மகாலட்சுமி கோவர்தனன் மற்றும் கோவர்தனன் முன்னிலை வகித்தனர் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான தரணி வேந்தன் சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.