முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் 2021ஆம் ஆண்டு டிச., 8ஆம் தேதி நீலகிரி குன்னூர் அருகே கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதன் 3வது ஆண்டு நினைவு நாளையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. விபத்து நடந்த பகுதியில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.