வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்களுக்கு, சப்ளிமெண்ட்ஸ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த மருந்துகள் ஆற்றல் அதிகரிப்பு மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதால் பகலில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் எடுத்துக் கொண்டால் தூங்குவதில் சிரமம் ஏற்படும். நன்றாக தூங்க முடியாமல் போவதால் மன ஆரோக்கியம் தொடங்கி ஒட்டுமொத்த ஆரோக்கியமும் கெட்டுவிடும்.