தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே உள்ள ஷெட்டிபாலம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வயதான மாமனாரை கண்மூடித்தனமாக செருப்பால் அடித்து தாக்கியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் மாமனார் அமர்ந்திருக்க, மருமகள் வேகமாக வந்து வயதில் மூத்தவர் என்று கூட பார்க்காமல் குச்சி, செருப்பு உள்ளிட்டவற்றை வைத்து கடுமையாக தாக்குகிறார். ஆனால், என்ன பிரச்சனை என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.