’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு விசிக தலைவர் திருமாவளவனை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அவர் கூறும் போது, "ஆதவ்-க்கு எதிரான மனநிலையில் உள்ளேன், ஒரு கருத்தை எப்படி, எங்கே சொல்ல வேண்டும் என்பது தான் யுக்தி" என்றார்.