திருப்பூர் மாவட்டம்
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு இன்று ராமரத யாத்திரை வாகனம் வந்த நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் செங்கோடு ஆஞ்சநேயர் ஆசிரமத்திலிருந்து நான்காம் ஆண்டாக ஸ்ரீ ராமர் ரத யாத்திரை மார்ச் 25 முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை கேரளா கர்நாடகா மற்றும் தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களுக்கு சுற்று பயணம் செல்லும் நிலையில் இறுதியாக ஸ்ரீ இராமாயண நவாக யாகத்துடன் ராம நவமி அன்று நிறைவு பெறுகின்றது. இந்த நிலையில் உடுமலை பிரசன்ன விநாயகர் திருக்கோவிலுக்கு வருகை புரிந்த இராம ரத யாத்திரை வாகனத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது
பின்னர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராமர் பட்டாபிஷேக விக்கிரத்தை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன தவத்திரு இராம நந்தநாதா சைதன்யா தலைமையில் ராதா யாத்திரை ஏற்பாடுகளை உடுமலை ஆர் வி எஸ் ஆறுமுகம் மற்றும் தங்கவேலு
ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.