உடுமலையில் விவசாயி குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்!

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் சிக்கனூத்து கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தாஜ் கடந்த 2007 ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பம் செய்து 18 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காமல் உள்ள மின்வாரியத்தை கண்டித்து உடுமலை மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பொழுது மின்வாரியத்தை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன இந்த நிகழ்வில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, மற்றும் சௌந்தரராஜன் மற்றும் தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலையில் 18 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காத மின்வாரியத்தை கண்டித்து விவசாய குடும்பத்துடன் மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி