உடுமலை: கேந்திரிய வித்யாலயா பள்ளி முற்றுகை இட்டு மனு!

68பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திர சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் பள்ளியில் தமிழ் பாடத்திற்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிப்பு செய்வதாக
புகார் எழுந்த நிலையிலும் , இடமாற்றம் செய்ய ஆறு வருடங்களாக தமிழக அரசு பள்ளி கட்டடத்தில் இயங்கி வரும் பள்ளி இடமாற்றம் செய்யக் கோரியும் இந்தியா ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிடர் கழகம் தமிழர் பண்பாட்டு பேரவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் உட்பட பல்வேறு கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் மனு வழங்கினர்

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது.
பாஜக மத்திய அமைச்சர் மும்மத கொள்கையை பின்பற்றாதவர்களுக்கு நிதி வழங்க முடியாது எனக் கூறியதால் தமிழக முழுவதும் கடந்த சில வாரங்களாகவே விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் தற்பொழுதுஆறு வருடமாக தமிழக அரசு கல்வித் துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகின்றது இவற்றை உடனே மாற்ற இடமாற்றம் செய்ய வேண்டும் மேலும் இப்பள்ளியில் தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் நிரந்தர தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி