ரீல்ஸ் மோகம்: ரயில் மோதி 3 வாலிபர்கள் பலி

62பார்த்தது
ரீல்ஸ் மோகம்: ரயில் மோதி 3 வாலிபர்கள் பலி
கர்நாடகா: ரீல்ஸ் மோகத்தால் ரயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த லலன் (24), ராகுல் (18), பிகேஷ் (20) ஆகிய 3 பேர் தொட்டபள்ளாப்புரா சித்தேநாயக்கனஹள்ளி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு 3 பேரும், ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி