ஏ.சி அறையில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு சளி பிரச்சனை, மூக்கடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அறையில் ஈரப்பதம் குறைவதால் கண்ணெரிச்சல் பிரச்சனையும் ஏற்படலாம். வெளிக்காற்று வருவதற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் ஒருவருக்கு தொற்று இருந்தால், அது மற்றவருக்கும் பரவ வாய்ப்பு உண்டு. ஏ.சி அறையில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு சருமம் மிக வறண்டு காணப்படும். ஏசியிலிருந்து வெளிப்படும் காற்றை நேரடியாக சுவாசிக்கும்படி உறங்கக் கூடாது.