பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகர் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2 பேர் சமீபத்தில் இறந்தனர். இதன் காரணமாக, ஒரு கொசுவைப் பிடித்துக் கொடுத்தால் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான அறிவிப்பால் பலர் கொசுவைப் பிடித்துக் கொடுத்து பணம் வாங்கிச் சென்றனர்.