காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுடுதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும், கொழுப்புகள் கரையும் என பலர் கூற கேட்டிருப்போம். ஆனால் இதில் உண்மை இல்லை என்று மருத்துவர் அருண்குமார் கூறியுள்ளார். கொழுப்பு என்பது நாம் எரிக்கும் வரை நம் உடலில் போகாது என்றும், அதை எரிப்பதற்கு முறையான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், சுடு தண்ணீர் மட்டும் குடித்தால் கொழுப்பு குறையாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.