உடுமலை: மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு- கிராம மக்கள் மறியல்

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் பகுதியில் தனியார் மதுபான கூடம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபானக்கூடம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இந்த பகுதியில் தற்போது ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த தளி காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது தேவனூர் புதூர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே மதுபான கூடத்தை மாற்று இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

உடுமலை அருகே மதுபான கூட்டத்தை அகற்ற கோரி சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி