திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பள்ளி சிறார் திரைஇடல் மன்றத்தின் வட்டார அளவிலான போட்டிகள் போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யாழினி, யோகிதா, தேஜா, பிரியதர்ஷினி, தர்ஷினி ஆகியோர் ஆசிரியர் ஒளிப்பதிவு போட்டியிலும், ஏழாம் வகுப்பு மாணவி அரஷின் சனா கதை வசனம் எழுதும் போட்டியிலும் வெற்றி பெற்றனர். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.