திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த உமர் அலி அன்னை தெரசா அறக்கட்டளை மூலம் சமூக சேவை செய்து வருகிறார். மானு பட்டியில் மாற்றுத்திறனாளிகள் உதவி மையம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனாதை சடலங்களை அடக்கம் செய்துள்ளார். பல்வேறு விருதுகளை பெற்ற நிலையில தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் இன்று(அக்.10) வழங்கினார்.