உடுமலை அருகே மர்மவிலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு!

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தான் வளர்த்து வந்த 6 ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலையில் வந்து பார்த்த போது மர்ம விலங்கு தாக்குதலுக்கு உள்ளாகி ஆடுகள் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதனால் அவர் வேதனை அடைந்தார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
சின்னவீரப்பட்டி பகுதியில் ஆடுகள் மர்ம விலங்கு தாக்தலுக்கு உள்ளாவது தொடர் கதையாக உள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறோம். ஏற்கனவே பல்வேறு இடர்பாடுகளால் விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கால்நடை வளர்ப்பும் இது போன்ற நிகழ்வால் கேள்விக்குறியாவது வேதனை அளிக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட துறையினர் ஆடுகளை தாக்கும் மர்ம விலங்கை கண்டுபிடிப்பது அவசியமாகும். அத்துடன் சின்னவீரம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி