திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே மானுப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் முறையாக கடந்த சில வாரங்களாகவே குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் நேற்று இரவு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதால் போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக கைவிட்டனர். இரவு நேரத்தில் குடிநீர் வழக்க கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முற்றுகையிட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.