அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

73பார்த்தது
அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்து சின்னமனூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். முன்விரோதம், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி