உடுமலை அருகே கனிம வளங்கள் கொள்ளை அதிகாரிகள் அலட்சியம்

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஜல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் சீதா மடை குட்டை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த குட்டைக்கு மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதில் தேங்கும் தண்ணீர் வனவிலங்குகளின் தாகத்தை தீர்த்து வருவதுடன் நிலத்தடி நீர் இருப்பையும் உயர்த்தி வருகிறது. இந்த சூழலில் முறையான அனுமதி பெறாமல் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சீதாமடை குட்டையில் தேங்கியுள்ள கனிம வளங்களை கடத்தும் பணியில் ஆசாமிகள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் அரிய வகை உயிரினங்கள் அழிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனிம வளத்தையும் கொள்ளையடித்து சென்ற வண்ணம் உள்ளனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி