திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே மடத்துக்குளம் கருப்புசாமி புதூர் வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை
நான்கு வழிச்சாலை செல்கின்றது. இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தியாகராஜன், மனைவி மகன்கள், பெற்றோர் உட்பட 6 பேர் கோவை மாவட்டம் தாமரை குளத்திற்கு உள்ள இறப்பு நிகழ்வுக்கு பொலிரோ வாகனத்தில் சென்று விட்டு இரவு பழனி திரும்பும் பொழுது கருப்புசாமி புதூர் என்ற இடத்தில் பாலக்காடு நோக்கி வந்த கொண்டிருந்த டெம்போ டிரவால்ஸ் நேருக்கு நேர் மோதி மோதியதில் தியாகராஜன்( 45) மனைவி பிரித்தி( 40) மகன் ஜெயப்பிரியன்(11) தாய் மனோன்மணி(65) , ஆகியோர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர். மற்றும் தந்தை நாட்ராயன்(75) மகன் ஜீவப்பிரியன்( 13) இருவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டெம்போ ட்ராவலர் வாகனத்தில் வந்த 23 பேரில் சுமார் 12 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாலக்காட்டிற்கு சென்றனர். உடுமலை அருகே நான்கு வழி சாலையில் இறப்பு நிகழ்ச்சி சென்று விட்டு ஊர் திரும்பும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது